தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share
 

 எந்திரன் - Enthiran The Robot

Go down 
AuthorMessage
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

எந்திரன் - Enthiran The Robot Empty
PostSubject: எந்திரன் - Enthiran The Robot   எந்திரன் - Enthiran The Robot EmptyWed Sep 22, 2010 7:47 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது.

ரஜினி, தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சர்வதேச தரத்தில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி செலவில் சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னை யில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.


எந்திரனுக்கு பிறகு தமிழில் பேண்டஸி கதைகள் நிறைய வரும் என்று இப்போதே கோடம்பாக்க ரசிகர்கள் பேசதொடங்கிவிட்டனர்.

இந்தப் படத்தில் அனிமேட்ரானிக்ஸ்[எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பொம்மைகளுக்கு உயிர் கொடுக்கும் முறை] எனும் புதிய உத்தியைப் முதன் முதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடல் இந்த படத்தில் பிரபுதேவாவின் புதுமையான நடன அமைப்பில் உருவாகிஉள்ளது.

நீண்ட இடைவேளைக்குப்பின் ரஜினியின் 'எந்திரன்' வருவவிருப்பதால் ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ஒரு 100000 வாலா சரவெடி என்பதில் சந்தேகமே இல்லை.
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

எந்திரன் - Enthiran The Robot Empty
PostSubject: எந்திரன் இசை உற்சவம்   எந்திரன் - Enthiran The Robot EmptyWed Sep 22, 2010 8:08 pm

எந்திரன் - Enthiran The Robot Enthiran-byfans1

வழக்கமாக கேட்க கேட்க இன்னும் சொல்லப்போனால் படம் வெளியானபிறகே ரசிகர்களுக்கு பிடிக்கும் ரஜினி + ரகுமான் கூட்டணி இம்முறை சங்கர் + கலாநிதிமாறன் + ரசூல் பூக்குட்டி கூட்டணியுடனும் வைரமுத்து, பா.விஜய், கார்க்கி பாடல் வரிகளிலும் கேட்ட உடனே மிகவும் பிடிக்கும் அளவு உள்ளது.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல பலதரப்பட்ட மக்களும் பாடலை முணுமுணுப்பதை கேட்கும் போது ரசிகர்கள் மட்டுமல்ல இசை பிரியர்களும் படல வரவேற்று ரசிப்பது நன்கு புரியும்.

படத்தில் ரோபோ குறித்த ஒரு ராப் பாடல் தவிர 6 முழு பாடல்கள் உள்ளன.

'புதிய மனிதா... பூமிக்கு வா...' என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், ஹதீயா ரஹ்மான் குரலுடன் ஆரம்பிக்கிறது இசை தட்டு,

ஏ.ஆர்.ரஹ்மான், ஹதீயா ரஹ்மான் குரலுடன் எந்திர மனிதர்கள் பாடுவது போல புதிர் கலந்த எதிபார்ப்புடன் துவங்கும் இப்பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது பேரறிவு' என வேகம்பிடிக்கிறது வைரமுத்துவின் பாடல் வரிகளும் அறிவியலை மிக எளிமையாக உணர்த்துவதாக உள்ளது உதாரணமாக "வயரூட்டி உயிரூட்டி" , "கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை", "என் தந்தை மொழி தமிழ் மொழி அல்லவா ?".... இதற்குமேல் இப்படளைப்பற்றி நான் என்ன சொல்ல....

'காதல் அணுக்கள்...' மீண்டும் வைரமுத்துவின் பாடல் வரிகளில் விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் குரலில் ஒரு காதல் டூயட்,

இப்படலை பற்றி கூறவேண்டுமானால் படத்தில் ரோபோவை உருவாக்கிய ரஜினியின் காதலை கூற அமைந்ததுபோல் உள்ளது.'இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே...' என்ற வைரமுத்துவின் வாரிசு கார்கியின் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான், காஷ் என் கிறிஸ்ஸி [பாடலில் வரும் ஆங்கில வரிகளின் சொந்தக்காரர்] குரலில்,

எந்திரனின் காதலை உற்சாகமாக ரசிகர்களுக்கு படத்த்ள்ளார் ரகுமான்.


'அரிமா அரிமா...' ஹரிகரன், சாதனாசர்க்கம் குரலில் ராசிக்காக வைரமுத்துவின் வரிகளில்,

இதுதான் ரஜினி ரசிகர்களுக்கான அதிரடி அட்டகாசம் என கூறலாம். அரிமா , நிஜமாகவே தமிழ் திரையுலகின் ஆண் சிங்கம் ரஜினி என்பைதை உணர்த்தும் வகையில் இப்பாடல் உள்ளது. அதிலும்

அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?


எனும் வரிகளை கேட்ட்கும் போது கம்பீரமாக உள்ளது.


'கிளிமாஞ்சாரோ...'ப.விஜயின் கலக்கல் வரிகளில் சின்மயி, ஜாவிட் அலி இருவரின் கிக்கான குரலில்,

இப்பாடல் மூலம் நம்மனதை கொல்லையடிததுபோல அந்நியன் படத்தின் அண்டங் காக்கா சிவாஜியின் பல்லேலக்கா போல காட்சிகளிலும் சங்கரின் தனித்துவம் அமையும் என எதிர் பாக்கலாம்.

'ரோ ரோ ரோபோடா...' கார்க்கி வரிகளில் யோகி பி, கீர்த்தி, ஸ்வேதா, தன்வி குரலில்,

இப்பாடலை அடுத்த தலைமுறைக்கான பாடல்கா எடுத்தக்கொள்ளலாம்.நிச்சயம் இத்தலைமுறை குழந்தைகளின் நாயகனாகவும் ரஜினிதான் அமையபோகிறார் சூப்பர் ஸ்டார்.

'பூம் பூம் ரோபா டா...' பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி குரலில்,


அமைந்த இந்த பாடல் தான் படத்தின் தீம் பாடலான ராப் பாடலில் ரோபோவின் அமர்களங்களை அதிகம் எதிர் பார்க்கலாம்.

Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
 
எந்திரன் - Enthiran The Robot
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
GENERAL, POLITICS, CINEMA & SPORTS
 :: சினிமா
-
Jump to: