தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeCalendarFAQSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

Share
 

 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj

Posts : 47
Join date : 2010-09-21

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Empty
PostSubject: தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்   தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் EmptySat Sep 25, 2010 12:04 am

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதுஇன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும். http://www.poetryinstone.in/lang/ta/
விழுகின்ற நிழல் ;
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Thiruc10


தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2008/12/17/does-the-tanjore-big-temple-vimana-cast-a-shadow.html

யாளி வீரர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Pranci10
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Who-is10

இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. மேலும் இதைப் பற்றி அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2009/06/03/tanjore-big-temple-vyaala-row.html

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Closeu10

டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்ட இந்த சிற்பத்தினை பற்றி அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2009/01/29/a-sculpture-monalisa.html

பெரிய நந்தி??? -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Closeu11
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Height10
கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2008/12/16/nandhi-on-tanjore-temple-vimanam-a-debate-on-its-size.html

துவாரபாலகர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் How-is10
சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சிற்பத்தின் மகத்துவம் அறிய இங்கு
http://www.poetryinstone.in/lang/ta/2008/09/14/how-big-is-big-part-2-on-the-tanjore-temple.html
Back to top Go down
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Empty
PostSubject: The Big Temple - Thanjavur தஞ்சை பெரிய கோவில்   தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் EmptySun Sep 26, 2010 9:36 am

The Big Temple - Thanjavur தஞ்சை பெரிய கோவில்


தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Thanjavur_Tower

Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
Admin
Admin


Posts : 54
Join date : 2010-09-21

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Empty
PostSubject: However, a few of the myths have been proved wrong.    தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் EmptySun Sep 26, 2010 9:38 am

Myth No :1 - Cap Stone - முக்கிய விமானம்

The cap-stone on the tower is not a monolith, but made of many parts.
கோவில் விமானம் ஒரே கல்லில் செய்யப்பட்டது அல்ல.

Myth No :2 - Gopuram does not cast a shadow at any time of the day outside its perimeter - கோபுர நிழல்

he belief that the shadow of the temple does not fall on the ground turns out to be incorrect.

இந்த கோபுர அமைப்பில் நிழல் தரையில் விழும் [புகைப்படம் பார்க்க] ஒருவேளை - இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே - மக்கள் ஆர்வத்தால் - அங்கு சென்று பார்த்து, ஆன்மீகப் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படவேண்டும் - என்ற நல்ல எண்ணம்தானோ என்னவோ?

எப்பொழுதோ விகடனில் படித்த ஜோக் : தஞ்சாவூர் ஆலய கோபுர நிழல் - கீழே விழுவதில்லை - ஏன் தெரியுமா?
பதில்: அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் அடி பட்டு விடுமே - அதனால்தான்!

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 81691cfe2a

For Proof Visit -

http://www.thehindu.com/mag/2010/01/10/stories/2010011050010100.htm
Back to top Go down
http://tamilvaanam.forumotion.com
Sponsored content
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Empty
PostSubject: Re: தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்   தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Empty

Back to top Go down
 
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
SPECIAL ARTICLES, POEMS & STORY
 :: கட்டுரைகள்
-
Jump to: