தமிழ் வானம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் வானம்

உண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil
 
HomeLatest imagesSearchRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» panimalar solai-1
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptySun Oct 03, 2010 1:42 pm by thamarai

» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:52 pm by Admin

» Home alone: (A family comedy without a family)
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:50 pm by Admin

»  Keep Busy - Share this post with your friends
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:43 pm by Admin

» பங்கு சந்தை
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:34 pm by Admin

» மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:22 pm by vasu

» நான் யார்? சொல்லுங்க
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:13 pm by vasu

» பூக்களின் சினேகிதிக்கு
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:07 pm by vasu

» கிச்சன் டிப்ஸ்
 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyWed Sep 29, 2010 1:04 pm by vasu

Social bookmarking
Social bookmarking reddit      

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website

Bookmark and share the address of தமிழ் வானம் on your social bookmarking website
Enthiran

 

  நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

Go down 
AuthorMessage
ooviyaa selvaraj

ooviyaa selvaraj


Posts : 47
Join date : 2010-09-21

 நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! Empty
PostSubject: நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!    நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்! EmptyMon Sep 27, 2010 3:32 pm

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!
3. உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!
4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!
5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!
6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!
7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!
8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!
9. தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.

நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!!
Back to top Go down
 
நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 51 Tips For Perfect Health நல்ல சுகாதாரமான உடம்புக்கு 51 முத்தான வழிகள்
» 10 Principles for Peace of Mind அமைதியான மனதுக்கு பொன்னான 10 வழிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
தமிழ் வானம்  :: 
SPECIAL ARTICLES, POEMS & STORY
 :: கட்டுரைகள்
-
Jump to: